மயிலாடுதுறையில் விரைவில் தொடங்கப்பட உள்ள 'Health Walk' திட்டத்திற்கு நடைபாதை தேர்வு செய்வது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் 'Health Walk' திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நடைபாதை அமைக்கப்படவுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முதல் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையிலான இடங்களை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு செய்தார். அப்போது 8 கிலோமீட்டர் நடைபயிற்சி மேற்கொண்டதோடு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த நடை பயணத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.