வாக் ஃபார் பிளாஸ்டிக்...வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் சாதனை!!

வாக் ஃபார் பிளாஸ்டிக்...வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் சாதனை!!
Published on
Updated on
1 min read

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு மஞ்சள் பை  திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தனியார் அமைப்பின் சார்பாக WALK FOR PLASTIC என்ற தலைப்பின் கீழ் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான்  நிகழ்ச்சி சென்னையில் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி சென்னையில் பூந்தமல்லி, மேடவாக்கம்  எக்மோர் உள்ளிட்ட 7 இடங்களில் இருந்து இந்த வாக்கத்தான்  தொடங்கியது.  இதில் 860 க்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து தாங்கள் செல்லும் வழியில் இருக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வந்தனர்.  இதன் இறுதியாக சென்னை கிண்டியில் உள்ள மத்திய பிளாஸ்டிக் மற்றும் பொறியியல் வளாகத்தில் இந்த வாக்கத்தான் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.  இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்று முடித்து வைத்தார் 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், “உபயோகமற்ற பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் கண் பாதிப்படைவது குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி காலையில் தொடங்கியது.  சிறுவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்று 860க்கும் மேற்பட்டோர் இன்று சென்னையில் 15 இடங்களில் ஏறத்தாழ 100 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று கீழே சிதறி கிடக்கிற உபயோகமற்ற 1100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வந்துள்ளனர்.  WALK FOR PLASTIC என்ற தலைப்பின் கீழ் இந்த வாக்கத்தான் சிறப்பாக நடைபெற்று world records union சாதனை படைத்துள்ளது.” எனத் தெரிவித்தார்.

மேலும், “20 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக்கின் பாதிப்பு மற்றும் பயன்பாடு குறித்து தமிழ்நாடு அரசு ஏற்கனவே  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.  தமிழ்நாட்டில் சுற்றுலா தலங்களில் 20 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மஞ்சப்பைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்.” எனவும் கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com