நாடாளுமன்ற தேர்தலுக்கு, வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு, வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார்!!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தளுக்காக அனைத்து வாக்கு பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் வாக்குபதிவு இயந்திரங்கள் விவிப்பேட் செயல்பாடுக்கள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் 

இது குறித்து சத்ய பிரதா சாகு கூறியதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான வாக்கு பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 30 சதவீகிதம் கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்கள் விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் 68036 வாக்குபதிவு மையங்கள் உள்ளன. ஒரு வாக்கு சாவடியில் 1500 வாக்காளர்கள் வாக்காளிக்க ஏற்பாடுக்கள் செய்யப்பட்டுள்ளது, வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்படும், எனவும் தற்போது வரை 1,78,357 வாக்கு பதிவு இயந்திரம், 102581 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 108732 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்து இருந்தால் அடுத்த 3 மாதத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர் எனவும், ஜூலை 4 ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் வாக்கு பதிவு இயந்திங்கள் ஆய்வு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com