மத்திய அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு!!!

மத்திய அமெரிக்காவில் எரிமலை வெடிப்பு!!!

கவுதமாலாவின் ஃபியூகோ எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக வானில் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் படிந்து காணப்பட்டது. 

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் செயல்படும் எரிமலை வெடித்து எரிமலை குழம்பு மற்றும் சாம்பலைக் கக்கி வருகிறது.  எரிமலை வெடிப்புக்குப் பிறகு, நாட்டின் மிகப்பெரிய விமான நிலையம் மற்றும் குவாத்தமாலா நகரில் உள்ள பெரிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. 

சனி முதல் ஞாயிறு வரை செயலில் இருந்த ஃபியூகோ எரிமலையால் வானில் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சாம்பல் படிந்து காணப்பட்டது.  காற்றின் காரணமாக, சாம்பல் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கவுதமாலா நகர் வரை பரவியுள்ளது.

எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஓடுபாதையில் சாம்பல் விழுந்ததால், குவாத்தமாலா நகருக்கு தெற்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாம்பலால்  லா அரோரா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக காலை மூடப்பட்டதாக சிவில் ஏரோநாட்டிக்ஸ் இயக்குநரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  குஜராத்தில் பாஜகவால் அசைக்க முடியாது என நிரூபித்த காங்கிரஸ் கோட்டை!!!