சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குளறுபடிகள்...விஜயகாந்த் கண்டனம்!!

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குளறுபடிகள்...விஜயகாந்த் கண்டனம்!!
Published on
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடந்த குளறுபடிகளை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "சென்னை பல்கலைக்கழகம், 165 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய ஜனாதிபதி, தமிழக ஆளுநர், முதலமைச்சர், உயர்கல்வி துறை அமைச்சர் இவர்கள் அனைவரும் பங்கேற்ற பட்டமளிப்பு நிகழ்ச்சியை சரியான முறையில் ஏற்பாடு செய்யாததால் மிகப்பெரிய ஒரு குளறுபடி நடந்து இருக்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "பட்டமளிப்பு விழாவில் படித்து முடித்த பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதில் பாதி பேருக்கு மேல் பட்டம் வழங்கவில்லை. மற்ற மாவட்டங்களில் இருந்து வந்திருந்த மாணவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல், தண்ணீர், கழிப்பறை வசதி, முறையாக ஏற்பாடு செய்யாமல், அனைவரையும் ஒரு அறையில் அடைத்து வைத்து, பட்டம் பெற முடியாமல் அந்த மாணவர்களுக்கு பின்னர் பட்டம் வழங்கப்படும் என்று சொல்லி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அனைவரின் வெறுப்போடும், மனக் கஷ்டத்தொடும் இந்த சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ந்துள்ளது. இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. படித்து முடித்து, பட்டம் பெறுவதற்கு பெரிய கனவுகளோடு எங்கெங்கோ இருந்து வந்தவர்களை, அவமரியாதை செய்து, பல இன்னல்களுக்கு ஆளாக்கி, பட்டத்தையும் வழங்காமல் பல மாணவர்களை திருப்பி அனுப்பியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இனிவரும் காலங்களில் இதுபோன்ற குளறுபடிகள் நிகழாத வண்ணம் இந்த அரசு கவனமாக செயல்படவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com