பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய வீடியோ...கையும் களவுமாக பிடித்த பெண்...!

பெண்கள் உடைமாற்றும் அறையில் ரகசிய வீடியோ...கையும் களவுமாக பிடித்த பெண்...!

கேரளாவில்  பெண்கள் உடைமாற்றும் அறையில் வீடியோ எடுத்த ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கேன் சென்டருக்கு சென்ற பெண்:

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது காலில் ஏற்பட்ட காயம் தொடர்பான சிகிச்சைக்காக ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் ஸ்கேன் எடுப்பதற்கு முன் உடையை மாற்றும்படி  கூறியுள்ளனர். இதனால் அந்த பெண் ஸ்கேன் சென்டரில் உள்ள உடைமாற்றும் அறைக்கு சென்று  உடையை மாற்றியுள்ளார்.

இதையும் படிக்க: அனைத்துக் கட்சி கூட்டம்...விசிக சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் என்னென்ன?

ரகசிய கேமரா:

அப்போது, அந்த அறையில் கேமரா மூலம் வீடியோ பதிவாகிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஸ்கேன் சென்டரில் பணியாற்றி வந்த அன்ஜித் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.