12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ...!

12 மணி நேரம் வேலை: முதலமைச்சருக்கு நன்றி சொன்ன வைகோ...!

12 மணி நேரம் வேலை சட்ட முன்வடிவை திரும்பப் பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில் 12 மணி நேரம் வேலை சட்ட மசோதாவை பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதா குறித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவி வந்தது. 

இந்நிலையில் 12 மணி நேரம் வேலை சட்ட முன்வடிவை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

இதையும் படிக்க : திரளான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்...!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாளில், தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் ( தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023, சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு நிறைவில் உறுதி கொள்வோம் என வைகோ குறிப்பிட்டுள்ளார்.