வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: இன்று தீர்ப்பு..!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி 1992-ம் ஆண்டு ஜூன் 20-ல் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் இணைந்து சோதனை நடத்தினர்.

அப்போது இளம்பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 215 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த  வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் இந்த, வழக்கு தொடர்பாக வாச்சாத்தி மலை கிராமத்துக்கு நீதிபதி பி.வேல்முருகன் நேரில் சென்றும் ஆய்வு செய்தார். இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழு : உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு..!