"அதிமுகவுடன் விசிக கூட்டணி சேருவதாக சிலர் ஜோசியம் சொல்கின்றனர்" வன்னி அரசு விமர்சனம்!!

Published on
Updated on
1 min read

மக்களவை தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அதிமுக பாஜவை விட்டு விலகியதாயால், விசிக அதிமுகவுடன் கூட்டணியில் சேரும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவத் தொடங்கின.

இந்நிலையில், மக்களவை தேர்தலிலும் திமுக உடனான கூட்டணி தொடரும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு உறுதியளித்துள்ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக தலைமையிலான கூட்டணி பாஜகவையும், சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணி என குறிப்பிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் விசிக சேரப்போவதாக பரவிய தகவலில் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், அதிமுக கூட்டணிக்கு விசிக வருவதாக சிலர் ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாகவும் வன்னி அரசு விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com