அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட வலியுறுத்தல் ..! பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!

அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட வலியுறுத்தல் ..! பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!
Published on
Updated on
1 min read

அனைத்து அறிவிப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் மாநில கடலோர மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

திருநெல்வேலி பகுதியை சேர்ந்த ரோசாரியோ விஜோ என்பவர்  உயர்நீதிமன்ற மதுரை   கிளையில் தாக்கல் செய்த மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:- 

கடலோர கடற்கரையை பாதுகாப்புத்திடம் மத்திய அரசின் சுற்று சூழல் துறை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு (Coastal Regulation Zone - 2019 notification)  ஒன்றை வெளியிட்டது. 

இதன் அடிப்படையில் கடலோர மீனவ மக்களிடம்   கருத்து  கேட்டு கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட வரைவு Coastal Zone Management Plan ( CZMP ) தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் உண்மையில்  கடலோரம் வாழும்  மீனவ மக்களுக்கு   கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ( 2019) குறித்து எந்த வித விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளனர்.

மற்றொரு  தரப்பு அதை தவறான புரிந்துகொண்டுள்ளனர்இதில் உள்ள விதிமுறைகள், சாதக பாதகங்கள் அவர்களுக்கு தெரியாது.

இந்நிலையில்  கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புக்கு , கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம்  தயாரிப்பது   ( Coastal Zone Management Plan ( CZMP ) ஏற்படுத்துவது ஏற்புடையதாக இருக்காது . 

மகாராஷ்டிரா,  கர்நாடக மாநிலங்களில் அவர்கள் மொழியில் மொழி பெயர்கப்பட்டு அனுப்பபட்டு உள்ளது. எனவே  இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ தமிழ் மொழிபெயர்ப்பை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும் ”,  என மனுவில் கூறி உள்ளனர்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின்  கோரிக்கை குறித்து  சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர்  உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com