டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திற்கு தினமும் 200க்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும் இவற்றில் 20-30 புகார்களுக்கு தீர்வு காணப்படாமலேயே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மாணவ, மாணவியர் அச்சத்தில் உள்ளதாகவும் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்கலைக்கழக உதவி மையத்திற்கு வரும் புகார் கடிதங்களில், மதிப்பெண் தாளில் மதிப்பெண்கள் பதியப்படவில்லை, பதிவு எண்கள் இல்லை, பெயர்களின் எழுத்துப்பிழை, பட்டப்படிப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் இடம்பெயர்வுக்கும் தினமும் 60 முதல் 80 விண்ணப்பங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றுக்கு தீர்வு காணப்படாததால், புகார் கடிதங்களும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் அல்லாத ஊழியர் சங்கத்தின் தலைவர் அகிலேஷ் சௌத்ரி கூறுகையில், மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு பல்கலைக்கழகமே காரணம் எனத் தெரிவித்துள்ளார் விரைவாக இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார் அகிலேஷ்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: புஷ்பா டைரக்டருடன் இணைகிறாரா பிரபாஸ்?!!!