கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம்... கூடுதலாக ரூ.1.65 கோடி ஒதுக்கீடு!!!

கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகம்... கூடுதலாக ரூ.1.65 கோடி ஒதுக்கீடு!!!
Published on
Updated on
1 min read

கூடுதல் உயரழுத்த மின்விநியோகப் பிரிவில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 16ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் கோடை காலம் முடிவடையும் வரை சீரான மின் விநியோகம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் எனவும் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் கூடுதல் உயரழுத்த மின் விநியோகப் பிரிவில் பராமரிப்புப் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதையொட்டி, அதிகளவில் மின்தடை ஏற்படும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும், சென்னை தெற்கு, வடக்கு, ஸ்ரீபெரும்புதூர், திருவலம், விழுப்புரம், கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.15 லட்சமும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதை பரிசீலித்த தொடரமைப்புக் கழகம், கோரிக்கையின் அடிப்படையில் ரூ.1.65 கோடி அவசரகால நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும் கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com