அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆசிய பயணங்கள்...!!!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆசிய பயணங்கள்...!!!!
Published on
Updated on
1 min read

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் COP-27 உச்சிமாநாட்டில், ஜோ பைடன் உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் உலகிற்கு என்ன தேவை என்பதில் அமெரிக்கா செய்த முக்கியமான பணிகளை முன்னிலைப்படுத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
 
காலநிலை மாநாடு:

எகிப்தில் நடைபெறவுள்ள உலகளாவிய காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கவுள்ளார். வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் பயணம்:

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு எகிப்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், அமெரிக்க-ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் நவம்பர் 12-13 தேதிகளில் கம்போடியா செல்லவுள்ளார்.

அதன்பிறகு அவர் ஜி20 தலைவர்களின் உச்சி மாநாட்டிற்காக நவம்பர் 13-16 வரை இந்தோனேசியாவின் பாலிக்கு செல்கிறார். 

வெள்ளை மாளிகை அறிக்கை:

நவம்பர் 11 ஆம் தேதி எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெறும் COP-27 உச்சிமாநாட்டில், ஜோ பைடன் உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் உலகிற்கு என்ன தேவை என்பதில் அமெரிக்கா செய்த முக்கியமான பணிகளை முன்னிலைப்படுத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பாலியில் ஜி 20 மாநாட்டில் தலைமை ஏற்கவுள்ளார்.

உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பிற்கான இந்த முதன்மை மன்றத்தில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டும் எனவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.  ஜி-20 தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். 

கமலா ஹாரிஸ் பயணம்:

ஜோ பைடனின் வருகைக்குப் பிறகு, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொள்வார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.  ஹாரிஸ் நவம்பர் 18-19 தேதிகளில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாங்காக் செல்கிறார். அதன் பிறகு மணிலா செல்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவர் அரசாங்க தலைவர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார். 
 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com