ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குகிறார் வெளியுறவுதுறை அமைச்சர்!!!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குகிறார் வெளியுறவுதுறை அமைச்சர்!!!

ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறவுள்ள இரண்டு உயர்மட்ட அமைச்சர்கள் கையெழுத்திடும் நிகழ்வுக்கு தலைமை தாங்க இரண்டு நாள் பயணமாக இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்தியாவின் தலைமையில்..:

டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தலைமையின் கீழ் உயர்மட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்க இரண்டு நாள் பயணமாக ஜெய்சங்கர் இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.  வெளியுறவு துறை அமைச்சரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் வரவேற்றுள்ளார்.

காம்போஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் "இந்தியாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் UNSC கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நமது வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  அமைச்சர் ஐ. நா.வில் முக்கியமான நிகழ்வுகள்  நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குகிறார்." எனப் பதிவிட்டுள்ளார்.

கூட்டத்தின் கருப்பொருள்கள்:

டிசம்பர் 14 அன்று நடைபெறவுள்ள உயர்மட்ட அமைச்சர்களின் திறந்த விவாதமானது "சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மைக்கான புதிய திசைகள்" என்ற கருப்பொருளிலும்,  டிசம்பர் 15 அன்று நடைபெறவுள்ள விவாதமானது "பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய அணுகுமுறையின் சவால்களை முன்னோக்கி செல்லும் வழி" என்ற தலைப்பிலும் நடைபெறவுள்ளது.  ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவின் தற்போதைய தலைமைக்கான பதவிக் காலத்தில் இந்த இரண்டு தலைப்புகளுமே இந்தியாவுக்கு முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   கோட்டையில் நிச்சயம் கொடி பறக்கும்...ஆனாலும் கேசிஆருக்கு இவ்வளவு நம்பிக்கை ஆகாதுப்பா....