காஷ்மீரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள போஷானா நதியில் ஏற்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இருவரையும் தேடும் பணி நடைபெற்று வீச்சாக நடைபெற்று வருகிறது. இரு வீரர்களும் சூரன்கோட் பகுதியில் உள்ள போஷானா என்ற இடத்தில் டோக்ரா எல்லையை கடந்து கொண்டிருந்தபோது, கனமழையால் திரண்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீரர்களைக் கண்டுபிடிக்க ராணுவம், காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரின் (SDRF) கூட்டு முயற்சிகள் நடந்து வருகின்றன. எனினும், இரு ராணுவ வீரர்களும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
வியாழன் இரவு முதல் காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளை ஒட்டியுள்ன பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தொடர் மழைப்பொழிவையடுத்து அமர்நாத் யாத்திரை இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டது.