இதுவா..? அதுவா..? ஆவின் பால் பாக்கெட்டில் இரண்டு விலை...!குழம்பிய மக்கள்!!

இதுவா..? அதுவா..? ஆவின் பால் பாக்கெட்டில் இரண்டு விலை...!குழம்பிய மக்கள்!!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஆவின் பால் பாக்கெட்டில் இரு விலை பட்டியல் அச்சிடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஆவின் பால் பாக்கெட் விநியோகம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி முழுவதும், நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் தயாரிக்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் தான் விநியோகம் செய்யப்படுகிறது.

ஒரே பால் பாக்கெட்டில் இரண்டு விலை:

இந்நிலையில் தற்போது சாத்தான்குளம் பகுதியில் விநியோகம் செய்யப்படும் ஆவின் ஹோமோஜனைஸ்டு பதப்படுத்தப்பட்ட நிறை கொழுப்பு ஆரஞ்ச் நிற பால் பாக்கெட்டில், அதன் முன் பகுதியில் 30 ரூபாய் எனவும், பின்பகுதியில் 25 புள்ளி 50 ரூபாய் எனவும், ஒரே பால் பாக்கெட்டில் இரு வேறு விதமான விலை அச்சிடப்பட்டுள்ளது. 

குழம்பும் பொதுமக்கள்:

இதனால் பால் பாக்கெட்டை வாங்கும் வாடிக்கையாளர்களும், அதனை விற்கும் வணிகர்களும் முன்னால் அச்சிடப்பட்ட விலை உரிய விலையா..? அல்லது பின்னால் அச்சிடப்பட்ட விலை உரிய விலையா..? என தெரியாமல் குழம்பி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ஆவின் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com