இரு ஹெலிகாப்டர்கள் மோதல்....அதிகரித்த உயிரிழப்பு ....விசாரணை தீவிரம்!!!

இரு ஹெலிகாப்டர்கள் மோதல்....அதிகரித்த உயிரிழப்பு ....விசாரணை தீவிரம்!!!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

மோதல் சம்பவம்:

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கடற்கரையில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிய சம்பவம் நடந்துள்ளது.  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியின் போலீஸ் அதிகாரி கூறுகையில், கோல்ட் கோஸ்டில் உள்ள மெயின்பீச் வழியாக சென்ற போது இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதியதில் நிலை தடுமாறி விபத்து நிகழ்ந்ததாக கூறியுள்ளார்.  

மீட்பு பணி:

கடற்கரையில் இந்த சம்பவம் நடந்ததன் காரணமாக மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   இருப்பினும் மீட்புக் குழுவினரும் மருத்துவர்களும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

பாதிப்பு விகிதம்:

குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் கருத்துப்படி, இரண்டு ஹெலிகாப்டர்களிலும் 13 பேர் இருந்ததாகவும் அவர்களில் நான்கு பேர் இறந்துள்ளதாகவும் மூன்று பேர் பலத்த காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயணிகளில் ஆறு பேர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?:

விபத்திற்கான சரியான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை என்றாலும் ஆரம்ப விசாரணையில், ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுக் கொண்டிருந்ததாகவும், தரையிறங்கி கொண்டிருந்த ஹெலிகாப்டர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com