நடுங்கும் குளிரிலும் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்...பனிமூட்டத்தால் ஏமாற்றம்!!!

நடுங்கும் குளிரிலும் ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள்...பனிமூட்டத்தால் ஏமாற்றம்!!!

உதகை தொட்டபெட்டா சிகரத்தில் வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.பனிமூட்டம் காரணமாக இயற்கை காட்சிகளை தொலைநோக்கி மூலம் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பி செல்கின்றனர்.


 ஊட்டியில் குவியும் சுற்றுலா பயணிகள் :

நீலகிரி : சுற்றுலா நகரமான உதகைக்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களிலிருந்தும், சமவெளி பிரதேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.குறிப்பாக உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படவே இல்லம், தொட்டபெட்டா சிகரம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் மிக உயர்ந்த சிகரமாக கருதப்படும் தொட்டபெட்டா சிகரத்திற்கு வார விடுமுறையான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.இந்த சிகரத்தில் இருந்து கண்ணைக் கவரும் இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பதோடு புகைப்படங்கள் மற்றும் செல்பி புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.இங்கு அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி மூலம் சமவெளி பிரதேசங்களையும், உதகை நகரத்தையும் காண முடியும். ஆனால் தற்போது பணி சீசன் துவங்கி உள்ள நிலையில் காலை முதல் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர 

மேலும் தெரிந்து கொள்ள /// மாமல்லபுர சுற்றுலா பயணிகளுக்கு இன்று இலவச அனுமதி...ஏன் தெரியுமா?