சீனப் பயணிகளை கவர்ந்திழுக்க தயாராகி வரும் சுற்றுலா தலம்....

சீனப் பயணிகளை கவர்ந்திழுக்க தயாராகி வரும் சுற்றுலா தலம்....
Published on
Updated on
1 min read

தாய்லாந்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான புக்கெட் தீவு சீன சுற்றுலாப் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது.  

கோவிட் 19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த எல்லைகளை சீன அரசு தற்போது சில கட்டுப்பாடுகளுடன் திறந்துவிட்டுள்ளது.  இந்நிலையில்,அதிகளவிலான சீன மக்கள் விரும்பிச் செல்லக்கூடிய இடமான புக்கெட் தீவில் பாராகிளைடிங், நீர் சறுக்கு ஆகியவற்றிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும், உணவகங்களும் சீன மக்களுக்கு பிடித்தமான உணவு வகைகளை தயாரிப்பதற்கான பணிகளில் உள்ளனர். குறைந்தபட்சம் ஐம்பது லட்சம் சீன சுற்றுலாப் பயணிகள் புக்கெட் தீவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com