சட்டப் பேரவையில் இன்றைய நிகழ்வுகள்...!!

சட்டப் பேரவையில் இன்றைய நிகழ்வுகள்...!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சட்டப்பேரவை காலை 10 மணிக்கு தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறுகிறது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள். அதற்கு துறை சார்ந்த  அமைச்சர்கள் உரிய பதிலை அளிப்பார்கள். இதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் எதிர் கட்சிகள் தற்போது இருகக்கூடிய பிரச்சனை குறித்து கேள்வி எழுப்புவார்கள். மேலும், அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்த  கவன ஈர்ப்பு தீர்மானங்களையும் எதிர்க் கட்சினர் கொண்டு வரவுள்ளனர்.

எதர்கட்சி தலைவர்  எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள், செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டியவை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்கவுள்ளார். 

இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழித்தட சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று  காங்கிரஸ் உறுப்பினர் ஜி.பிரின்ஸ், கனவ ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வருகிறார். இதற்கு பொதுப் பணிதுறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளிக்கிறார். இதன் பின்பு, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட  மசோதாவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தாக்கல் செய்யவுள்ளார்.

மேலும், மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்குகிறது. இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை ,கதர் மற்றும் கிராமத் தொழில் துறை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை மீதான விவாதமும்  அதை தொடர்ந்து அமைச்சர்கள் பதிலுரையும் அளிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com