உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்குகிறது.
வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் 202 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த தொடரில் இந்திய ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம், அதே ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா அசத்தினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மட்டுமே நீரஜ் சோப்ரா இதுரை தங்கம் வெல்லவில்லை. தற்போது சிறந்த பார்மில் உள்ள நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஒரே நாளில் 7 பதக்கம் வென்று இந்திய வீராங்கனைகள் அசத்தல்...!