" நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்" - டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு.

" நடவடிக்கைகள் குறித்து அறிக்கை  அளிக்க வேண்டும்" - டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு.
Published on
Updated on
1 min read

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. 

சென்னை பெரம்பூரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, தன்னை விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.  இதனையடுத்து குஷ்பு குறித்து அவதூறு பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலளார் துரைமுருகன் அறிவித்தார்.

இவ்வாறிருக்க, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை எழுப்பிய நிலையில், கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில், இது குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள தேசிய மகளிர் ஆணையம்,   உரிய நேரத்தில் நியாயமான விசாரணையை நடத்தி, சட்டப்படி  நடவடிக்கை எடுக்குமாறு  டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com