நாடாளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் டிக்டாக்கை தடை செய்ய இருப்பதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்குச் சொந்தமான டிக்டாக் செயலி உள்பட சில செயலிகளை பயன்படுத்த இந்தியா அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை உலக நாடுகள் தொடர்ந்து தடை விதித்து வருகின்றன. அந்தவகையில், இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களில் டிக்டாக் செயலி தடை செய்யப்படுமென்று நியூசிலாந்து நாடாளுமன்ற சேவையின் தலைமை நிர்வாகி ரஃபேல் கோன்சலஸ் குறிப்பிட்டுள்ளார்.
இணைய பாதுகாப்பு காரணமாக இந்த பயன்பாட்டை தடை செய்வதாக நியூசிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: இலங்கையில் இருந்து நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் விடுதலை...!!!