எனக்கே அனுமதி அளிக்க மாட்டேன் என்கிறார்கள் : அமைச்சர் காந்தி  !!!

எனக்கே அனுமதி அளிக்க மாட்டேன் என்கிறார்கள் : அமைச்சர் காந்தி  !!!
Published on
Updated on
1 min read

கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள லூம் வேர்ல்டு வளாகத்தில் ஹேண்ட் லூம்ஸ் ஆப் இந்தியா விற்பனையகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, எம். எல். ஏ வானதி சீனிவாசன் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். 

நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் காந்தி, எம். எல். ஏ வானதி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  மத்திய அரசை திட்டவில்லை என்றால் தான் நிற்பேன் என நகைச்சுவையுடன் வானதி சீனிவாசன் கூற, அமைச்சர் ஏதும் கூற மாட்டேன் என நகைச்சுவையுடன் கூறினார்.

அமைச்சர் காந்தி பெட்டியில் கைத்தறி துறை, நெசவாளர் முன்னேற்றத்திற்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார் எனவும், நெசவாளர் முன்னேற்றதிற்கு அனைத்து நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கிறது எனவும் தெரிவித்தார்.  தொடர்ந்து பேசிய அவர் தமிழ் நாட்டில் முன்பு 18 மில்கள் இருந்தன எனவும் இப்போது 6 தான் உள்ளன எனவும் கூறினார். 

இரண்டு ஆண்டுகளாக கைத்தறி துணிநூல் துறைக்கு முக்கியத்துவம்  கொடுத்து இந்த அரசு செயல்பட்டு வருகின்றது எனவும் பழைய மாடல்களை மாற்றி நவீனப்படுத்தி இருக்கின்றோம் எனவும் கூறிய அவர் கைத்தறி துணிநூல் துறை கடந்த ஆண்டு 9 கோடி நஷ்டத்தில் இருந்தது எனவும் இப்போது 20 கோடி லாபத்துடன் இந்த துறை இயங்கி வருகின்றது எனவும் பேசினார். 

டெக்ஸ்டைல் துறையில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் கோவை இருக்கிறது என தெரிவித்த அவரிடம் NTC ஆலைகள் கொரோனாவுக்கு பிறகு திறக்கப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, எனக்கே NTC இல் PERMISSION தர மாட்டேன் என்கிறார்கள் என நகைப்புடன் கூறினார்.  அப்போது பேசிய எம். எல். ஏ வானதி,  NTC தொடர்பாக கொள்கை முடிவு எடுத்து தீர்வு காணப்படும் என கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com