"மோடிக்கு மாற்று என்பதற்கான கேள்விக்கே இடம் இல்லை" பாஜக மூத்த தலைவர்

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் முழு மதுவிலக்கை அமல்படுத்தியதை பாராட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவர் பாரதி. 

"மோடிக்கு மாற்று என்பதற்கான கேள்விக்கே இடம் இல்லை"  பாஜக மூத்த தலைவர்

மாநிலம் முழுவதும் மது விலக்கை அறிமுகப்படுத்தியுள்ள பீகார் முதலமைச்சரின் தைரியத்தை பாராட்டுவதாக பாரதி கூறியுள்ளார். ஆனால் அவர் எப்போதும் பிரதம்ர் மோடிகு மாற்று சக்தியாக உருவாக முடியாது எனவும் பேசியுள்ளார் பாரதி.

பாஜகவின் மூத்த தலைவரான பாரதி மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவார்.  அவரது மாநிலத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர முயன்று அதில் தோல்வியடைந்ததாகவும் ஆனால் பீகார் முதலமைச்சர் அதை சிறப்பாக செய்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் தற்போதைய முதலமைச்சர் ப்ருத்விராஜ் சௌகான் அதற்கான முயற்சிகளை செய்வதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார். 

பிரதமர் மோடிக்கு எதிரான மாற்று சக்தியாக நிதிஷ் குமார் இருப்பாரா என்ற கேள்விக்கு “ நிதிஷால் நிச்சயம் அதை செய்ய முடியாது.  மோடிக்கு மாற்று என்பதற்கான கேள்விக்கே இடம் இல்லை.  மோடி ஒரு தனித்துவமான நபர் மற்றும் அத்தகைய மனிதர் அரிதாகவே வருவார்கள்.”  என பாரதி கூறியுள்ளார்.

"மேலும், அவர் கடவுளின் படைப்பு, மக்கள் அவருடன் இருக்கிறார்கள்," என்று முன்னாள் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். மேலும் குமாரின் முயற்சி எதிர்க்கட்சிகளை வலுப்படுத்தும், மோடி கூறியது போல் நாட்டிற்கு வலுவான எதிர்ப்பு தேவை, அது ஜனநாயகத்திற்கும் நல்லது.”என்றும் பாரதி கூறியுள்ளார்.

இதையும் படிக்க: "ஒரு நரியைப் போல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது”