பெரு நாட்டில் தொடரும் போராட்டம்....பதவி விலகுவாரா அதிபர்?!!!

பெரு நாட்டில் தொடரும் போராட்டம்....பதவி விலகுவாரா அதிபர்?!!!

பெரு நாட்டின் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்தனர். 

பெருவின் அதிபர் பெட்ரோ காஸ்டிலோ பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் எழுந்து வருகின்றன இந்த நிலையில், லிமா நகரில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  அப்போது அவர்களை விரட்டி அடிக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகை வெடிகுண்டுகளைப் பயன்படுத்தினர். 

கடந்த சில மாதங்களாக பெருகி வரும் எதிர்ப்பலை காரணமாக நடந்த போராட்டங்களில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலிலும் அதிபர் தரப்பிலிருந்து தற்போது வரை எத்தகய பதிலும் அளிக்கப்படவில்லை.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த சோகம்....இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு....