”தமிழ் மண்ணை மாற்றக்கூடிய சக்தி; என் மண் என் மக்கள் '' மூலம் உருவாகும் - அண்ணாமலை!

”தமிழ் மண்ணை மாற்றக்கூடிய சக்தி;  என் மண் என் மக்கள் '' மூலம் உருவாகும் - அண்ணாமலை!
Published on
Updated on
1 min read

ஊழல் வாதிகளை ஒழித்து ஏழைகளின் நலத்தை காக்கும் அரசை  'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை மூலம் உருவாக்க இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். 

ராமேஸ்வரத்தில் நடந்த தொடக்க விழாவில் பேசிய அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் 15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். ஊழல் இல்லா நாடாக மாற்ற வேண்டும் என்பதே இந்த யாத்திரையின் நோக்கம் என்றார்.

மோடியின் பெருமையை உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே இந்த பயணத்தின் இலக்கு என்று அண்ணாமலை தெரிவித்தார். தமிழ் மண்ணை மாற்றக்கூடிய சக்தி இந்த யாத்திரைக்கு இருக்கிறது என்றும், ஊழல் வாதிகளை ஒழித்து ஏழைகளின் நலத்தை காக்கும் அரசை உருவாக்கவே இந்த யாத்திரை எனவும்  அண்ணாமலை சூளுரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பிரதமர் பறைசாற்றி வருகிறார் எனவும், தமிழ் இனத்தையும், தமிழ் கலாச்சாரத்தையும் உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com