பயணிகளிடம் பேரம் பேசிய காவல்துறையினர்..... நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

பயணிகளிடம் பேரம் பேசிய காவல்துறையினர்..... நடவடிக்கை எடுத்த காவல்துறை!!!

ரயில் பயணிகளை மிரட்டி பணம் பறித்ததாக, இன்ஸ்பெக்டர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசிய காவல்துறை:

ரயிலில் இரண்டு கோடி ரூபாய் ஹவாலா பணம் கொண்டு வந்த 4 பயணிகளின் விவரத்தை முறையாக விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாமல்,  வருமான வரித்துறையில் ஒப்படைப்போம் என, பயணிகளிடம் பேரம் பேசி, காவல் துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக, 
ரயில்வே தனிப்பிரிவு குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் முருகன் ( பொறுப்பு )  
பெரம்பூர் ரயில்வே காவல் நிலையம், சப் இன்ஸ்பெக்டர் குமார், காவலர்கள் தினேஷ், சுதாகர் ஆகியோர் செயல்படுவதாக, ரயில்வே காவல்துறையின் டி ஐ ஜி க்கு தகவல் கிடைத்துள்ளது.

விசாரணை:

இதையடுத்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில், எவ்வித ஆவணமும் இல்லாமல் பெரம்பூர் ரயில் நிலையம் வந்து இறங்கிய நான்கு பயணிகள் வைத்திருந்த 2 கோடி ரூபாயை பறிமுதல் செய்ததோடு, வருமான வரித்துறையில் ஒப்படைத்து விடுவோம் என மிரட்டி, பறிமுதல் செய்த பணத்தை மீண்டும் திருப்பி ஒப்படைக்க வேண்டுமானால், குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் எனக்கூறி, பணத்தை பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பணியிடை நீக்கம்:

இதையடுத்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முருகன் உள்பட நான்கு பேரையும்  தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டதுடன், துறை ரீதியான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:     ”மத்திய அரசால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு.....”