வயலில் விழுந்து நொறுங்கிய விமானம்.... சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு....

வயலில் விழுந்து நொறுங்கிய விமானம்.... சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு....

பிலிப்பைன்சில் 260' ரக விமானம் ஒன்று வயலில்  விழுந்து நொறுங்கிய விபத்தில்  2 விமானிகள் உயிரிழந்துள்ளனர். 

பிலிப்பைன்ஸ் நாட்டின் விமானப்படைக்கு சொந்தமான 'மார்செட்டி எஸ்.எப். 260' ரக விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது.  அப்போது, இந்த விமானம் பிலார் நகருக்கு மேலே பறந்துகொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் விமானிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்படும் என பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   போரில் தன்னார்வ ஊழியர்கள் உயிரிழந்த சோகம்....