பயிற்சி மருத்துவரை தாக்கிய நோயாளி...! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

பயிற்சி மருத்துவரை தாக்கிய  நோயாளி...!    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!
Published on
Updated on
2 min read

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருபவர்  சூர்யா. இவர், நேற்று இரவு  ஒரு மணி அளவில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி என்ற நோயாளிக்கு மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததார்.

அப்பொழுது பாலாஜி தன் கையில் சொருகி வைக்கப்பட்டிருந்த குல்கோஸ் ஊசியினை அகற்றக்கோரி பயிற்சி மருத்துவரான சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு அருகே வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை கொண்டு சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் சூர்யா,  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பயிற்சி மருத்துவரின் தாக்குதல்  சம்பவத்தை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்  மாணவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் பேரணி ராஜன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு வருகிற காலங்களில் உறுதிப்படுத்தப்படும் எனவும் தற்பொழுது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி மாணவர்களிடம் சமரசம் பேசினார். அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறுகையில்,....  

பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை விரைந்து  நிறைவேற்றப்படும் எனவும், இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாகவும் மேலும் மருத்துவமனை மருத்துவரின் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கையானது  எடுக்கப்படும் எனவும்,  அவர் கூறினார். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் மூன்று மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தினால் அப்பகுதியில் சற்று பரபரப்பானது ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com