எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!

எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுவாகவே, அரசியல் கட்சிகளை பொறுத்தவரையிலும் அரசியல் சார்ந்த கூட்டங்களிலும் சரி தேர்தல் நேரங்களில் சரி பொதுமக்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வருவது என்பது சமீபகாலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வே, அந்த வகையில், தற்போது ஒரு திட்டத்திற்கான கருத்து கேட்கும் கூட்டத்திற்கு கட்சியினர் பொதுமக்களை அழைத்து வ்ரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக நடைபெற்று வரும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுகவினர் அழைத்து வந்த பொதுமக்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பான வீடியோவில், கூட்டத்திற்கு வந்துள்ள பொதுமக்களிடம், கூட்டத்திற்கு எதற்காக வந்துள்ளீர்கள், என்ன கருத்தினை தெரிவிக்க உள்ளீர்கள் என ஊடகவியாலர்கள் கேள்வி எழுப் பியபோது, நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்றே தெரியவில்லை என்றும், ஒரு சிலர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளதாகவும், கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்கு வந்துள்ளதாகவும் பல்வேறு விதமான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : பிஎஸ் எடுத்துள்ள புதுவியூகம்...வீடு வீடாக...ஆர். பி.உதயகுமார் சொன்ன தகவல்...!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்துவிட்டு, எதற்காக வந்துள்ளோம் என்றே தெரியாமல் கருத்து கேட்பு கூட்டமா???கட்சி பொதுக்கூட்டமா??? என பல்வேறு முரண்பாடான பதில்களை பொதுமக்கள் தெரிவித்திலிருந்தே, அவர்கள் தங்களுடைய உணர்வுபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதற்காக வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. 

வழக்கம்போல் அரசியல் சார்ந்த கூட்டத்திற்கு பணத்தை கொடுத்து ஆள் சேர்ப்பது போலவே, இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கும் பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வந்தது போலத்தான் தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.