ஆவடி மாநகர திமுக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் மகன்... காரணம் என்ன?!!

ஆவடி மாநகர திமுக பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் மகன்... காரணம் என்ன?!!

திமுகவின் ஆவடி மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து ஆசிம் ராஜா விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் கட்சியினாிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆவடி மாநகர செயலாளராக ஆசிம் ராஜா பதவி வகித்து வந்தார்.  இந்நிலையில் அவர் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் ஆவடி மாநகர செயலாளர் ஆசிம் ராஜா மாநகர செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், கழகப் பணிகள் சிறப்பாக நடைபெற அவருக்கு பதிலாக சன்.பிரகாஷ் ஆவடி மாநகர பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாகவும் தொிவித்துள்ளார். 

திமுகவில் நடந்து முடிந்த 15-வது உள்கட்சி தேர்தல் மூலம் ஆவடி மாநகர செயலாளராக ஆசிம் ராஜா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆசிம்ராஜா பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் மகன் ஆவாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:    ஈரோடு தேர்தல்.... பரிசீலனை செய்யப்படும் வேட்பு மனுக்கள்...