கடுக்காய் தொழிற்சாலை கேட்ட எம்.எல்.ஏ...மிடுக்காய் பதில் அளித்த அமைச்சர்!

கடுக்காய் தொழிற்சாலை கேட்ட எம்.எல்.ஏ...மிடுக்காய் பதில் அளித்த அமைச்சர்!
Published on
Updated on
1 min read

கடுக்காய் தொழிற்சாலை கேட்ட எம்.எல்.ஏவுக்கு, உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காது என மிடுக்காய் பதிலளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கேள்வி:

சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. முதலில் இரங்கல் குறிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து சட்டப்பேரவையின் கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன்,  "காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் உண்டு காலை ஊண்றி கோலை வீசி குலுங்கி நடப்பார்” என்று கூறுவார்கள். 

கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காய் நடப்பார்கள் என்று சுட்டிக்காட்டி பேசிய அவர், எங்கள் கழுவாயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கழுவாயன் மலையிலும் கடுக்காய் அதிகமாக கிடைக்கிறது. ஆனால், சிறு தரகர்களால் அந்த மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது. ஆகவே சாயம் தயாரிப்பதற்கும், மருத்துவ குணம் கொண்ட கடுக்காய் தொழிற்சாலையை சங்கராபுரம் தொகுதியில் உருவாக்கி தர அமைச்சர் முன் வருவாரா என கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் பதில்:

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காது" என்று பதிலளித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com