கள்ளக்காதலுக்கு தடையாக வந்த கணவன்... மிளகாய் பொடி தூவி...!!

கள்ளக்காதலுக்கு தடையாக வந்த கணவன்... மிளகாய் பொடி தூவி...!!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி என் தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன்.  இவரும் கமக்காலப்பட்டியைச் சேர்ந்த சந்தியா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 

இந்த தம்பதிக்கு சந்திஸ், சர்வேஷ் என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கந்தன் அந்த பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.  எந்நேரமும் வேலை வேலை என இருந்தவர் வீட்டை கவனிக்காமல் விட்டு விட்டார் கந்தன். கணவனால் அன்பும், பாசமும் கிடைக்காமல் சந்தியா ஏங்கி வந்துள்ளார்.  இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிவசக்தி என்பவர் பால் பாக்கெட் போட்டு வந்துள்ளார்.  அப்போது சந்தியாவை பார்த்தவுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் பால்காரன் சிவசக்தியும், சந்தியாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.  இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் கந்தன் கண்டித்தபோதும், சந்தியா கேட்பதாக தெரியவில்லை.   இந்நிலையில் 14-ம் தேதியன்று கந்தன் வண்டி ஓட்டுவதற்காக இரவில் வெளியே சென்றவுடன் சிவசக்தி பால் பாக்கெட்டுடன் சந்தியாவின் வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறார். அப்போது திடீரென இன்ப அதிர்ச்சியளிக்க நினைத்த கந்தன், வீட்டின் கதவை திறந்தபோது தூக்கி வாரிப்போட்டது. 

அங்கே சிவசக்தி வீட்டில் இருந்ததைக் கண்டு கடும் கோபத்துடன் சண்டையிட்டார் கந்தன்.  இதனால் பதறிப்போன கள்ளக்காதல் ஜோடி விபரீத முடிவை கையில் எடுத்தனர்.  வீட்டின் சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து கணவன் கண்ணில் தூவ, அருகில் நின்றிருந்த கள்ளக்காதலன் சிவசக்தி கத்தியை எடுத்து மார்பு, கழுத்து பகுதிகளில் சரமாரியாக குத்தினார். 

சுமார் 25 இடங்களில் கத்தி குத்து வாங்கிய கந்தன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தார்.  இதையடுத்து சில நிமிடங்கள் தீவிர யோசனையில் ஆழ்ந்தவர்கள் ரத்தக்கறையை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு கணவனின் நண்பனுக்கே போன் செய்து, கந்தன் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக கதையை மாற்றிக் கூறியுள்ளார் சந்தியா. 

இதுகுறித்து அறிந்த நாகரசம்பட்டி போலீசார் உயிரிழந்த கந்தனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலையாளிகள் சந்தியா, சிவசக்தி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com