அமைச்சா் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழ்நாடு ஆளுநா் ஆர்.என்.ரவி. திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக ஆளுநா் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தாா்.
இதையும் படிக்க : புதிய தலைமைச் செயலாளர் நியமனம்...! யார் இந்த சிவதாஸ் மீனா?
இந்நிலையில் ஆளுநாின் இந்த அதிரடி முடிவிற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவரும் எதிா்ப்பு தொிவித்தனா். இந்த பரபரப்பான சூழ்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை ஆளுநா் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆலோசனை பெற இருப்பதாகவும், அதுவரை பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநா் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.