தமிழ்நாடு, தமிழ்மொழி...இரண்டையும் காப்பாற்றுவதற்கு எஞ்சி இருக்கும் ஒரே தலைவர்...அமைச்சர் சொல்வது என்ன?

தமிழ்நாடு, தமிழ்மொழி...இரண்டையும் காப்பாற்றுவதற்கு எஞ்சி இருக்கும் ஒரே தலைவர்...அமைச்சர் சொல்வது என்ன?
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும் காப்பாற்றுவதற்கு எஞ்சி இருக்கும் ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்துள்ளார். 

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா  :

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட செம்மஞ்சேரி பகுதியில்  பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

ஆளுநருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் :

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன், ஆளுநர் தமிழ்நாடு என்று கூறக்கூடாது என்று தெரிவித்த அவருக்கு தக்க பதிலடி நாம் கொடுக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்றத்தில்  அரசு தயாரித்த அறிக்கையில் இடம்பெற்ற தலைவர்களின் பெயர்களை படிப்பதற்கு ஆளுநருக்கு மனம் வரவில்லை, நம்முடைய தலைவர்களை புகழ்வதற்கு மனம் வரவில்லை. ஆனால், தமிழகத்தை உயர்த்திய தலைவர்களை தூக்கி பிடிக்கும் தலைவராக முதலமைச்சர் இருக்கின்றார்.

ஒரே தலைவர் :

தமிழர் மானத்தை காப்பாற்றுவதற்கும் தமிழ்நாட்டை, தமிழ் மொழியை காப்பாற்றுவதற்கு எஞ்சி இருக்கு ஒரே தலைவர் முதல்வர் ஸ்டாலின் தான் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com