மீண்டும் டெல்லி பறந்த ஆளுநர்....காரணம் என்ன?!!!

மீண்டும் டெல்லி பறந்த ஆளுநர்....காரணம் என்ன?!!!
Published on
Updated on
1 min read

இன்று காலை மீண்டும் டெல்லி சென்றுள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. 

முதல் கூட்டம்:

இந்த ஆண்டுக்கான தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது.  அப்பொழுது முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என். ரவி கூட்டத்தொடரை விட்டு வெளியேறினார்.  இது நாடு முழுவதும் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டது.

சர்ச்சை:

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் ரவி, அரசு கொடுத்த உரையின் சில பகுதிகளை தவிர்த்தும், சில பகுதிகளை திரித்து படித்ததாகவும் சர்ச்சை எழுந்ததால் அவரது உரையின் சில பகுதிகள் அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

குடியரசு தலைவரிடம்...:

இதைத் தொடர்ந்து, இந்நிகழ்வு தொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை கடந்த 12-ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை கொடுத்த அவர்கள், பேரவையில் நடந்த நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.

டெல்லி பயணம்:

இதையடுத்து, கடந்த 13-ம் தேதி டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 14-ம் தேதி இரவு சென்னை திரும்பினார்.

மீண்டும் டெல்லிக்கு...:

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் இன்று காலை 7 மணி அளவில் டெல்லி சென்றுள்ளார்.  தமிழ்நாடு விவகாரம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு ஆளுநர் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com