தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை செவி சாய்த்து 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மே தின விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொமுச கொடியை ஏற்றி வைத்து மே தின நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் பேசுகையில், சென்னையில் இதே நாளில் தான் 100 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுவுடைமை இயக்கத்தலைவர் சிங்கார வேலரால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டானது 100வது சிறப்பு ஆண்டு என கூறிய அவர் தொழிலாளர்களின் நலனை பேணிக்காக்கும் இயக்கம் திமுக எனவும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை செவிசாய்த்து 12 மணிநேர வேலை மசோதா திரும்ப பெறப்பட்டது எனவும் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்விடத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தொமுசவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், சேலம் மாநகராட்சி மேயர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க:பதவி இழக்கும் அமைச்சர்கள்...! யார்? யார்?