இந்த ஆண்டின் முதல் புயலாக மோசமான புயலாக வருகிறது... 'மோக்கா '..!

இந்த ஆண்டின் முதல் புயலாக மோசமான புயலாக வருகிறது... 'மோக்கா '..!
Published on
Updated on
2 min read

வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு இந்த பகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்கதேசம், ஏமன், கத்தார் உள்பட 13 நாடுகளின் பெயர்கள் சூட்டப்படுகின்றன. இந்த ஒவ்வொரு நாடுகளும் ஆண்டுக்கு 13 பெயர்களை பரிந்துரைக்கும். அந்த வகையில் ஆண்டுக்கு 169 பெயர்கள் புயல்களுக்கு சூட்டுவதற்காக பட்டியலிடப்பட்டிருக்கும்.

அந்த வகையில் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள வங்கதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய நாடுகள் ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்டு உள்ளன.

அந்த வகையில், தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் உருவாக உள்ள அதிதீவிர புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டபட்டுள்ளது. மோக்கா என்ற பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே மே 14 முன்மதியம் மோக்கா அதிதீவிர புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 

இந்நிலையில், தென்கிழக்கு வங்க  கடல் மேலுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து 05 கி.மீ வேகத்தில் நகர்ந்து போர்ட் பிளேயர் சுமார் 510 கிமீ மேற்கு-தென்மேற்கும்,   காக்ஸ் பஜாரின் தென்-தென்மேற்கு 1460 கிமீ (வங்காளதேசம்) மற்றும் 1340 கிமீ தென்-தென்மேற்கு சிட்வேயில் (மியான்மர்) மையம் கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, மே 10 ஆம் தேதி மாலை அதே பகுதியில் படிப்படியாக ஒரு  புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது. அதன் பின் இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்வதைத் தொடர்கிறது, படிப்படியாக தீவிரமடையும்என கூறப்படுகிறது. 

இதையடுத்து, மே 11 ஆம் தேதிக்குப் பிறகு தீவிர புயலாக மாறி, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்க கடல்  அதன்பிறகு, இது படிப்படியாக மீண்டும், வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்க கடல் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகள் காக்ஸ் பஜார் (வங்காளதேசம் வங்காளதேசம் 60) க்கு இடையில் கடந்து செல்லும் எனவரும் தங்கள் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நர்கிஸ் சூறாவளி, தெற்காசியாவில் இயற்கை பேரழிவுகளில் ஏற்பட்ட பெரிய புயல்களில் ஒன்றாக இப்போதும் பார்க்கப்படுகிறது, அந்த புயலை போலவே தற்போது உருவாகி வரும் மோச்சா புயலும் இருப்பதாக வானிலை வல்லுனர்கள் எச்சரித்து உள்ளனர்.

 இதையும்  படிக்க     }  மணிப்பூர் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை...!!

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com