குஜராத்தில் முடிவடைந்த முதற்கட்ட தேர்தல்...!!!!

குஜராத்தில் முடிவடைந்த முதற்கட்ட தேர்தல்...!!!!
Published on
Updated on
1 min read

குஜராத் முதற்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், நாளையுடன் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. 

குஜராத் தேர்தல்:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  அதன்படி மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 இடங்களுக்கு நேற்று முதற்கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.  விறுவிறுப்புடன் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், மாநிலம் முழுவதும் 60.48 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல்:

இந்நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வரும் 5ம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறவுள்ளது.  இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில்  பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  நாளை மாலையுடன் 2ம் கட்டத் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.

தேர்தல் முடிவுகள்:

தொடர்ந்து இருகட்டத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com