மோதலினால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...... உதவிக்கு அழைத்த பிரதமர்....

மோதலினால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை...... உதவிக்கு அழைத்த பிரதமர்....

ஜெனினில் நடைபெற்ற மோதலில் இஸ்ரேலியப் படையால் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலில் அப்பாவி பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ள இஸ்ரேலியப் படைகள், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீனத்தின் மேற்குகரையான, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.  காசா பகுதியில் பாலஸ்தீன நாட்டின் இஸ்லாமிக் ஜிகாத்  என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.  எனவே, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு பாலஸ்தீன அதிகார சபைக்கு பிரதமர் முகமது ஸ்டய்யே அழைப்பு விடுத்துள்ளார்.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ரஷ்ய தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு.....