எல்லா நிறுவனங்களின் பெயர் பலகைகளிலும் தமிழுக்கு அடுத்த படியாக பிறமொழிகள் இடம்பெற வேண்டுமென்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கினோம், ஆனால் எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசப்பான உண்மை என்று கூறியுள்ளார். எனவே, பெயர் பலகைகளில் முதலில் தமிழ், அடுத்தது ஆங்கிலம் மற்றும் அதற்கு அடுத்தபடியாக மற்ற மொழிகள் இடம்பெறும் வகையில் இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எழுத்துக்கள் சீர்த்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழ்நாட்டில் ஏசியன் பீச்கேம் நடத்துவதற்கு கோரிக்கை ...!!!