தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து கோயில்களில் மக்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சூரியனை அடிப்படையாக வைத்து ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் நாள் தமிழ் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து மக்கள் பலர் காலை முதல் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே பண்டிகை கேரள மக்களுக்கு விஷு, மேற்கு வங்காளத்தில் பொய்லா போயிஷாக், அசாமில் உள்ளவர்களுக்கு பிஹு, பஞ்சாபில் வைசாகி போன்ற இந்தியாவின் பிற பாரம்பரியங்களின் புத்தாண்டுடன் ஒத்துப்போகிறது. இந்த தமிழ் புத்தாண்டு திருநாள் இலங்கைத் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது மற்றும் தீவு நாட்டில் இது ஒரு பொது விடுமுறை நாளாகும்.
இதையும் படிக்க: அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை...!!!