திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மத்திய அரசு, காவிரி டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டங்களை கைவிட்டதற்கான அறிவிப்பு ஆணையை உடன் வெளியிடவேண்டும்; தமிழ்நாடு அரசு, நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 -ஐ திரும்ப பெற்றிட வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை அருகே மாபெரும் உண்ணாவிரதபோரட்டம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைபஞ்சாப் விவசாயி ராஜவிந்தர் சிங் கோல்டன் துவக்கிவைத்தார் , ஹரியானா விவசாயி சுவாமி இந்தர் மற்றும் திருவாரூர் , கடலூர் , சிதம்பரம் , தஞ்சாவூர் , அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது...
"தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கிற நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 காவேரி டெல்டா வேளாண் மண்டலத்தை அபகரிக்கின்ற மோசடியான சட்டம், இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வருமேயானால் ஒட்டுமொத்த விளை நிலங்களும் கார்பரேட்டுகள் அபகரிப்பாளர்கள் நீர் நிலைகள், ஏரிகள், குளம், குட்டைகள் நீர் வழிப்பாதைகள் அபகரிக்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கிற மக்களாட்சிக்கு முரணான திட்டம்; இதை ரத்து செய்ய வேண்டும். நிலக்கரி திட்டத்தை ரத்து செய்வதாகவும் அது டெண்டர் பட்டியிலிருந்து நீக்கப்படும் என மத்திய சுரங்கத்துறை அமைச்சர் அறிவித்தார்.ஆனால் அதற்கான அறிவிப்பானை அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு வெளியிடவில்லை.
தமிழக அரசும் வாய்மூடி மௌனியாக இருக்கிறது.தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை கைவிடாவிட்டால் 2011 தேர்தலில் திமுக கட்சிக்கு எதிராக விவசாயிகள் ஒன்று எப்படி திரண்டோமோ அதுபோல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு விவசாயிகளை திமுக ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைய தயங்க மாட்டோம்", என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இதையும் படிக்க } "மிகப்பெரிய மோசமான எதிரி என்றால் ஜெயலலிதா....!"
மேலும் " டெல்லியில் நீதி கேட்டு மல்யுத்த வீராங்கனைகள் நடத்திக் கொண்டிருக்கிற அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கிற வகையில் பஞ்சாப், ஹரியானா விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு இப்போராட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார்கள். வீராங்கனைகளுக்கு சீரழிவு ஏற்படுத்தி இருக்கிற பாஜக பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், கைது செய்யப்பட வேண்டும். குற்ற செயல்களை செய்து விட்டு சுதந்திரமாக அவர் வெளியில் நடமாடுகிறார். மத்திய அரசு அந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்", என தெரிவித்தார் .