"தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்ப்போரை சுட வேண்டும்..." - எச்.ராஜா

"தி கேரளா ஸ்டோரி'  படத்தை எதிர்ப்போரை சுட வேண்டும்..." - எச்.ராஜா
Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தினை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த டிஜிபி ஆர்டர்  கொடுக்க  வேண்டும் என்ற அவர், " தி கேரளா ஸ்டோரி' படத்தை எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை நான் 5-ஆண்டுகள் கேராளா பொறுப்பாளராக இருந்துள்ளேன்.படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மை; எனவே கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு  மத்தியப் பிரதேச மாநிலம் வரிவிலக்கு அளித்துள்ளது; அதைபோல் தமிழகத்தில் வரிவிலக்கு அளித்து  அந்த படத்தினை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட்டு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும்",  என்றார்.

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுபோய் கிடக்கின்றது  என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் 'லாக்கப் டெத்' சாத்தான்குளத்தில்  மட்டும் தான் நடந்தது; ஆனால் திமுக ஆட்சியில் மாதத்திற்கு ஒன்று நடக்கின்றது. என்று குற்றம்சாட்டினார்.  மேலும் அவர்,  "தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு ஒரே ஒரு சுதந்திரம் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது அது அவர் எங்கு வேண்டுமானாலும் சைக்கிளிலில் செல்லலாம்; செல்பி எடுக்கலாம்" என்றார்.

மேலும் ஒரே வருடத்தில் 30ஆயிரம் கோடி அடித்தது தான் திராவிட மாடல் ஆட்சியின் திறமை என்றார். மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு முதன் முதலில் அனுமதி அளித்ததே  திமுக-தான். இந்தியாவில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டால் 40-சதவீதம் காப்பர் சீனாவிடம் வாங்கலாம் அதன் பொருளாதாரத்தை கூட்டலாம் என்ற நோக்கில் சில கை கூலிகள் தீய சக்திகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடினர். 

ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு மதவிரோத அன்னிய சக்திகள் தான் காரணம். ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது தொடர்ந்து படிபடியாக ஆலையினை திறக்க அனுமதிக்கலாம் என்று நினைக்கின்றேன்.எனவே தீய சக்திகளின் எண்ணம் பலிக்காது என்று பாஜக மூத்த தலைவரும் முன்னால் தேசிய செயலாளருமான எச்.ராஜா தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com