அதிமுக பொதுக்குழு செல்லும்...OPS தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!

அதிமுக பொதுக்குழு செல்லும்...OPS தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
Published on
Updated on
1 min read

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக்  தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி  பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை எதிர்த்தும் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்,  அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் செல்லும் என்று இன்று தீர்ப்பளித்தனர். தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும்  பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த அனைத்து மேல் முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் அதிமுக பொதுக் குழு நடைபெற்றுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் தடை விதிப்பதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என்றும் கூறியுள்ளனர். தீர்மானங்களுக்கு ஏதாவது தடை விதித்தால் கட்சி செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்யஜீள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com