முதலமைச்சருக்கு சவால் விட்ட ஆளுநர்...அப்படி என்ன சவால்?!!

முதலமைச்சருக்கு சவால் விட்ட ஆளுநர்...அப்படி என்ன சவால்?!!
Published on
Updated on
1 min read

ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை இயக்கவில்லை, அதை யாராவது நிரூபித்தால் பதவி விலகுவேன் என்று தெரிவித்துள்ளார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.

நடந்தது என்ன?:

பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு மாறாக, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைக் கருத்தில் கொண்டு, ஒன்பது மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அக்டோபர் 24-ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்யுமாறு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேட்டுக் கொண்டார். ஆளுநரின் இந்த உத்தரவுக்குப் பிறகு, கேரள அரசு ராஜ்பவனுக்கு வெளியே போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டியது.  

தொடரும் மோதல்:

ஆளுநருக்கும், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் செயல்திட்டங்களை ஆளுநர் ஊக்குவிப்பதாக யெச்சூரி குற்றம்சாட்டியதோடு
திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவனுக்கு எதிர்ப்பு பேரணி நடத்தினர். 

தீயை மூட்ட முயன்ற கேரள அமைச்சர்:

ஆரிஃப் முகமது கான்  உத்திரப்பிரதேசத்தில் பிறந்தவர் கேரளாவின் கல்வி முறையை எப்படி புரிந்துகொள்வார் என்று கேரளா மாநில நிதியமைச்சர் விமர்சித்ததாக ஆரிப் முகமது கான் கூறினார்.  இது மாநிலங்களிடையே பிரச்சினையை எழுப்பும் செயல் எனக் கேரள அரசாங்கள் கண்டனம் தெரிவித்தது.

பதவி விலக தயார்:

ஆர்எஸ்எஸ்-ன் செயல் திட்டங்களை  ஊக்குவிப்பதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கு தகுந்த பதில் அளித்த அவர், நான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டத்தை இயக்கவில்லை என்றும், இந்த குற்றச்சாட்டை யாராவது நிரூபித்தால் உடனடியாக பதவி விலகுவேன் என்றும் கூறினார்.   மேலும் நான் ஆர்எஸ்எஸ்-ன் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துகிறேன் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக நீங்கள் கூறி வருகிறீர்கள் என்று ஆளுநர் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ஆளுநர்,அரசியல் தொடர்பாக உங்களை தொந்தரவு செய்யும் யாரேனும் ஒருவரை காட்டுங்கள்.  எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நான் நியமனம் செய்த யாராவது ஒரு ஆர்எஸ்எஸ், பாஜகவை சேர்ந்த நபரை காண்பியுங்கள்.  உடனே பதவி விலகுகிறேன் என சவால் விட்டுள்ளார் ஆளுநர் ஆரிப்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com