துணை வேந்தரை நியமிக்க அரசுக்கு அதிகாரமில்லை - ஆளுநர் ரவி!

துணை வேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநாின் ஒப்புதலின்றி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநா் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வுக்குழுவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆளுநா் ஆர்என் ரவி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநாின் ஒப்புதலின்றி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் தொிவித்துள்ளாா்.

இதையும் படிக்க: "பாடப்புத்தகத்தில் சானாதனம் குறித்த கருத்து நீக்கப்படும்" - அன்பில் மகேஷ்

மேலும் அரசின் அறிவிப்பு பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது என தெரிவித்துள்ள அவர், அரசிதழில் வெளியிட்ட உத்தரவை திரும்பப்பெற உயர்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.