முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக மாசெ கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர் மற்றும் பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், அமைச்சர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரக்கூடிய நிலையில் மாவட்ட செயலாளர்கள் தொகுதி பார்வையாளர்கள் தலைமையில் பூத் கமிட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே டெல்டா, தென்மண்டல மேற்கு, மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் மூன்று இடங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். மேலும், ஒரு சில மாவட்டங்களில் பூத் கமிட்டிகள் சரிவர அமைக்கப்படாமல் உள்ளது. 

அது குறித்தும், ஒரு சில மாவட்ட செயலாளர் மீது அவ்வபோது புகார்கள் எழுந்து வருவது தொடர்பாகவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளார். 

மேலும், திமுக பொது குழு மற்றும் செயற்குழு நடைபெற்று ஓர் ஆண்டு காலம் நிறைவு பெற்று இருக்கும் நிலையில் திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தின் வாயிலாக பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: காவிரி நீர் விவகாரம்; ஓ.பி.எஸ் கண்டனம்!