தனியார் தொழிற்சாலையிடம் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர்!

தனியார் தொழிற்சாலையிடம் மாமூல் கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுக நகர செயலாளர்!
Published on
Updated on
1 min read

திருச்சியில் ரகளையில் ஈடுபட்டு மாமூல் கேட்ட கல்லக்குடி திமுக நகர செயலாளர் மீது, டால்மியா சிமெண்ட்  நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே உள்ள கல்லக்குடியில், பால்துரை என்பவர் பேரூராட்சி தலைவராகவும், கட்சியில் கல்லக்குடி நகர செயலாளர் ஆகவும் பதவி வகித்து வருகிறார். அமைச்சர் கே என் நேருவின் ஆதரவாளரான இவர் டால்மியா சிமெண்ட் ஆலையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளார்.

அவர்களுக்கு வேலை வேண்டுமென டால்மியா ஆலை நிர்வாகத்தை கேட்டுள்ளார். ஆனால் நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், சிமெண்ட் நிறுவனத்தின் மூலம், கள்ளக்குடி பேரூராட்சி நகரச் செயலாளருக்கான மாமூல் தொகை வழங்காதது கண்டித்தும், சிமெண்ட் ஆலை மூலம் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்ட பணிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கடிந்து பேசியுள்ளார்.

இவர் கூறிய எதற்கும், அலை நிர்வாகம் செவி சாய்க்காத சிலையில், திமுக நகர செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பால்துரை ஆத்திரமடைந்துள்ளார். இதனால், பால்துரை, அவரது ஆதரவாளர்கள் இருவருடன்,  நேற்று முன் தினம் இரவு, மதுபோதையில், அத்துமீறி ஆலைக்குள் புகுந்து பாதுகாப்பு அலுவலர்களை தாக்கியும், நிறுவனத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்தும் சேதப்படுத்தியுள்ளார். 

இதனால் பாதிக்கப்பட்ட டால்மியா சிமெண்ட் அலையின் நிர்வாகத்தினர், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கல்லக்குடி காவல் நிலையத்தில் பால்துரை மற்றும் அவருடன் இருந்த 2 பேர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து கல்லக்குடி காவலர்கள் விசாரைணயில் ஈடுபட்டு வருகின்றனர்.  

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com